आपकी जीत में ही हमारी जीत है
loading...
01:59 PM | Mon, 05 Dec 2016

Download Our Mobile App

Download Font

ஆஸி. அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றது!

310 Days ago
| by

rohit

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரையும் வென்றுள்ளது.இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் குவித்தது.ஆஸி. அணிக்கு கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கியது இந்திய அணி. ஆனால் தொடக்க வீரர்களான ஃபின்ச் மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியுடன் ஆடினார்கள். முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு 10-வது ஓவரில், மார்ஷின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். மார்ஷ் 23 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் லிண்-னின் (2 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார் பாண்ட்யா. இதன்பிறகு இந்திய அணி ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இன்று யுவ்ராஜ் சிங்குக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது முதல் ஓவரிலேயே மேக்ஸ்வெல்லின் (1 ரன்) விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு 2 ஓவர்கள் மட்டுமே விக்கெட் விழாமல் இருந்தது. 15-வது ஓவரில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் அருமையான கேட்ச்சால் ஆட்டமிழந்தார் வாட்சன்.அடுத்த ஓவரில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார் ஃபின்ச். அவர் 74 ரன்கள் எடுத்தார். பிறகு வந்த ஃபாக்னர் ஒரு சிக்ஸர் அடித்து 10 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 17-வது ஓவரின் முடிவில் 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது ஆஸி. அணி. பிறகு ஹேஸ்டிங்ஸ், டை ஆகியோர் தலா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.கடைசியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது ஆஸி. அணி. இதனால் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது டி20 போட்டியை வென்று தொடரையும் வென்றுள்ளது. இந்தியத் தரப்பில் பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.கோலி, ரோஹித் அசத்தல்!முதல் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, இந்தப் போட்டியில் அதே அணியுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன், ஆண்ட்ரூ டை, போலண்ட் ஆகிய மூன்று வீரர்கள் அறிமுகமானார்கள். ஹேஸ்டிங்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோரும் அணியில் இடம்பெற்றார்கள். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் நியூஸிலாந்து தொடருக்கு தயாராகவிருப்பதால் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பு, ஆரோன் பின்ச்-க்கு வழங்கப்பட்டது.தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவனும் களமிறங்கினார்கள். முதல் 3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார்கள். அதன்பிறகு அதிரடி ஆரம்பமானது. இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்தார்கள். 10-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 86 ரன்கள் குவித்தது. பிறகு 32 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த தவான், மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு ரோஹித் சர்மா 60 ரன்களில் (47 பந்துகள்) ரன் அவுட் ஆகி வெளியேறினார்.இந்த ஆட்டத்திலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட் கோலி. அவருடைய ஒவ்வொரு பவுண்டரியும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருந்தது. 29 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ரோஹித் சர்மா அவுட் ஆனபிறகு களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இந்திய அணி 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. 59 ரன்கள் எடுத்த கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

()

Viewed 112 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail
You might also want to read

Our Media Partners

app banner

REVOLUTIONARY ONE-STOP ALL-IN-1 MARKETING & BUSINESS SOLUTIONS

  • Digital Marketing
  • Website Designing
  • SMS Marketing
  • Catalogue Designing & Distribution
  • Branding
  • Offers Promotions
  • Manpower Hiring
  • Dealers
    Retail Shops
    Online Sellers

  • Distributors
    Wholesalers
    Manufacturers

  • Hotels
    Restaurants
    Entertainment

  • Doctors
    Chemists
    Hospitals

  • Agencies
    Brokers
    Consultants

  • Coaching Centres
    Hobby Classes
    Institutes

  • All types of
    Small & Medium
    Businesses

  • All types of
    Service
    Providers

FIND OUT MORE