DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
03:52 PM | Fri, 27 May 2016

Download Our Mobile App

Download Font

துருக்கியில் குண்டு வெடிப்பு: 10 பேர் சாவு; பலர் படுகாயம்

135 Days ago
| by Dinamani

Istanbul

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இன்று சக்திவாயந்த குண்டு வெடித்ததில் 10 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.இஸ்தான்புல் நகரின், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் சுல்தானாக்மெட் பகுதியில் இன்று சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 10 ர் பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இது ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் என்றும் வெடிகுண்டு நிறப்பட்ட கார் வெடிக்கச் செய்யப்பட்டது என்றும் மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்யும் பெண் ஒருவர் கூறுகையில், ''மிகவும் பலத்த வெடிச்சத்தம் கேட்ட போது. நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். வெளியே ஓடியவந்து பார்த்த போது பல சடலங்கள் சிதறி கிடந்ததை பார்த்தோம்” என்றார்.இதனிடையே இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இது எவ்வகையான வெடிவிபத்து என்பது குறித்து புலானய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், யார் இச்செயலில் ஈடுபட்டனர் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.இதனிடையே குண்டு வெடித்த இடத்தை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர்.காயமடைந்த பலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

()

Viewed 61 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

Download India's No.1 FREE All-in-1 App

Daily News, Weather Updates, Local City Search, All India Travel Guide, Games, Jokes & lots more - All-in-1