DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
09:09 AM | Wed, 29 Jun 2016

Download Our Mobile App

Download Font

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 15 பேர் பலி

160 Days ago
| by Dinamani

Pak

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட நான்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பக்துன்கவா மாகாணத்தில் உள்ள  பச்சா கான் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை பாடல் பயிற்சிக்காக கூடினர். அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் திடீரென்று மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.நிகழ்விடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 11 பொதுமக்களும், 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டனர். பல்கலைக்கழகம் தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறியுள்ளார்.இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அப்பாவி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை கொலை செய்வதர்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்றார்.நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் துடைத்தெறியப்படும். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களின் தியாகங்கள் வீண் போகாது என்றார்.

()

Viewed 87 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

Download India's No.1 FREE All-in-1 App

Daily News, Weather Updates, Local City Search, All India Travel Guide, Games, Jokes & lots more - All-in-1