DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
02:08 AM | Sat, 02 Jul 2016

Download Our Mobile App

Download Font

மகளிர் டி20: பாக். அபார பந்துவீச்சு! இந்தியா 96 ரன்கள்!

104 Days ago
| by Dinamani

image 1936

பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இரு அணிகளும் கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதியிருந்தன. அதில் இந்தியா வென்றது. நடப்பு உலகக் கோப்பை போட்டியில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது.தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் 4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. வனிதாவும் (2) மந்தனாவும் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதற்குப் பிறகு இந்திய வீராங்கனைகள் நிதானமாக ஆடினார்கள். மிதாலி ராஜ் 35 பந்துகளிலும் கெளர் 29 பந்துகளிலும் தலா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். 5-வதாகக் களமிறங்கிய வேதா கிருஷ்ண மூர்த்தி, வேகமான ஆட்டத்தால் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினார். அவர் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாக். பந்துவீச்சாளர் அனம் அமின், 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

()

Viewed 68 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

Download India's No.1 FREE All-in-1 App

Daily News, Weather Updates, Local City Search, All India Travel Guide, Games, Jokes & lots more - All-in-1