DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
01:57 PM | Tue, 26 Jul 2016

Download Our Mobile App

Download Font

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி அசத்தல் வெற்றி!

195 Days ago
| by

Bailey

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் 309 ரன்கள் குவித்தது. இதன்பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் இலக்கை எட்டியது. இதனால் ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸி. அணி முன்னிலை பெற்றுள்ளது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பரிந்தர் ஸ்ரன் இடம்பெற்றார். இது அவருடைய முதல் சர்வதேசப் போட்டியாகும். மணிஷ் பாண்டேவுக்கும் அணியில் இடம் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர்கள் போலண்ட், பாரிஸ் இடம்பெற்றார்கள்.தொடக்க வீரர்களாக தவனும் ரோஹித் சர்மாவும் களமிறங்கினார்கள். தவன், 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் கோலியும் அருமையாக ஆடினார்கள். தகுந்த நேரத்தில் பவுண்டரிகளை அடித்து அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார்கள். 63 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா. 21.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. 31-வது ஓவரில் 150 ரன்களை எடுத்தது. பிறகு கோலி 61 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கோலியின் முதல் அரை சதம் இது.முதலில் இருந்தே கவனமாக் ஆடிவந்த ரோஹித் சர்மா, 122 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருடைய 9-வது ஒருநாள் சதமாகும். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 3 முறை சதமடித்துள்ளார்.கோலியும் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 91 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட் ஆனார் கோலி. இந்தக் கூட்டணி 207 ரன்கள் சேர்த்து இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.ரோஹித் சர்மாவின் கடந்த 6 சதங்கள், 135 ரன்களுக்குக் கூடுதலாக எடுக்கப்பட்டவை (137, 138, 141*, 150, 209, 264). இந்தமுறையும் சதம் அடித்தபிறகும் வேகம் குறையாமல் ஆடினார். 48-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தார். 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த தோனி, ஃபாக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.கடைசி ஓவரில் இந்திய அணி 300 ரன்களைக் கடந்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா கடைசி வரை அவுட் ஆகாமல் 171 ரன்கள் எடுத்தார் (13 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்). இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஃபாக்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெய்லி - ஸ்மித் அசத்தல்இதன்பிறகு பெரிய இலக்கை எட்டவேண்டிய பொறுப்புடன் களமிறங்கிய தொடக்க வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் புதுமுகமான ஸ்ரண். ஃபிஞ்சை 8 ரன்களிலும் வார்னரை 5 ரன்களிலும் வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டனும் ஸ்மித்தும் பெய்லியும் அட்டகாசமாக ஆடினார்கள். சிக்ஸருக்குக் குறி வைக்காமல், சிங்கிள், பவுண்டரி என வகைவகையாக ரன் சேர்த்தார்கள். இந்நிலையில் 101 பந்துகளில் சதம் அடித்தார் பெய்லி. அதன்பிறகு, 39-வது ஓவரில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் ஸ்மித்.பிறகு பெய்லியின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். பெய்லி, 112 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் - பெய்லி கூட்டணி, 3-வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்தன. இதற்கு முன்னர், ரோஹித் சர்மாவும் கோலியும் இணைந்து 207 ரன்கள் எடுத்தார்கள். ஒருநாள் போட்டி வரலாற்றில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டைச் சதக் கூட்டணி அமைந்தது இதுவே முதல்முறை.மேக்ஸ்வெல் வெர்சஸ் அஸ்வின் போட்டியில் இந்தமுறை அஸ்வின் வெற்றி பெற்றார். சிக்ஸர் அடிக்க முயன்று 6 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 149 ரன்களுக்கு அவுட் ஆனார் ஸ்மித். ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் போட்டியை வென்றது. இந்திய அணி சார்பில் ஸ்ரண் 3 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

()

Viewed 57 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

REVOLUTIONARY ONE-STOP ALL-IN-1 MARKETING & BUSINESS SOLUTIONS

  • Digital Marketing
  • Website Designing
  • SMS Marketing
  • Catalogue Designing & Distribution
  • Branding
  • Offers Promotions
  • Manpower Hiring
  • Dealers
    Retail Shops
    Online Sellers

  • Distributors
    Wholesalers
    Manufacturers

  • Hotels
    Restaurants
    Entertainment

  • Doctors
    Chemists
    Hospitals

  • Agencies
    Brokers
    Consultants

  • Coaching Centres
    Hobby Classes
    Institutes

  • All types of
    Small & Medium
    Businesses

  • All types of
    Service
    Providers

FIND OUT MORE