DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
10:24 PM | Fri, 30 Sep 2016

Download Our Mobile App

Download Font

மொஹாலி டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்; 8 விக்கெட்டுகளை இழந்தது!

328 Days ago
| by

sa3xx

தென் ஆப்பிரிக்காவுக்கான எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 3-ம் நாளான இன்று இந்திய அணி தடுமாற்றம் கண்டுவருகிறது. 2-வது இன்னிங்ஸில், 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 68 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்களில் சுருண்டதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. புஜாரா 63, கோலி 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.  3-ம் நாளான இன்று புஜாராவும் கோலியும் நிதானமாக ஆடத் தொடங்கினார்கள். எக்காரணம் கொண்டு விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள். காயம் ஏற்பட்டதால் ஸ்டெய்ன் இந்த இன்னிங்ஸில் பவுலிங் செய்யவில்லை. அதனால் தென் ஆப்பிரிக்க வீரர்களும் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். முதல் ஒரு மணி நேரத்தில் 15 ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் ஆட்டத்தின் 56-வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது.29 ரன்களில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. அதன்பிறகு ஆட்டத்தில் திடீரென தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் உருவானது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. இந்திய அணிக்குப் பெரிய பலமாக விளங்கிய புஜாரா 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரஹானேவின் விக்கெட்டும் (2 ரன்கள்) பறிபோனது. பிறகு ஜடேஜா 8 ரன்களிலும் மிஸ்ரா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். வந்த வேகத்தில் இந்திய வீரர்கள் பெவிலியன் திரும்பியதால் இந்திய ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். உணவு இடைவேளை நெருங்கும்போது 3 ரன்களில் அஸ்வினும் அவுட் ஆனார். இதனால் 24 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்து 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என்கிற நிலைமைக்குச் சென்றது.உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 69.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. சஹா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்.2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், இந்தியா 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

()

Viewed 66 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

REVOLUTIONARY ONE-STOP ALL-IN-1 MARKETING & BUSINESS SOLUTIONS

  • Digital Marketing
  • Website Designing
  • SMS Marketing
  • Catalogue Designing & Distribution
  • Branding
  • Offers Promotions
  • Manpower Hiring
  • Dealers
    Retail Shops
    Online Sellers

  • Distributors
    Wholesalers
    Manufacturers

  • Hotels
    Restaurants
    Entertainment

  • Doctors
    Chemists
    Hospitals

  • Agencies
    Brokers
    Consultants

  • Coaching Centres
    Hobby Classes
    Institutes

  • All types of
    Small & Medium
    Businesses

  • All types of
    Service
    Providers

FIND OUT MORE