A part of Indiaonline network empowering local businesses

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

News

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 Days ago