आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

இலங்கையில் இருந்து பைபர் படகில் இந்தியாவுக்குள் ஊடுருவிய 5 பேர் கைது: பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை

News

இராமேஸ்வரம்: இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் ஐஎன்எஸ் பருந்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் 10:00 மணியளவில் ரோந்து சென்ற போது இந்திய எல்லைக்குள் OFRP - A- 3981 MNR பதிவு எண் கொண்ட இலங்கை பைப்பர் படகு ஒன்று வருவதை கண்டறிந்தனர். கடற்படையினர் அவர்களைப் ஹெலிகாப்டர் மூலம் விரட்டி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் விட்டனர். அங்கு பணியில் இருந்த மெரைன் போலீசார் படகையும் அதிலிருந்த ஐந்து பேரையும் பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இலங்கையிலிருந்து பைபர் படகில் வந்துள்ள நபர்கள் கடத்தல்காரர்களா அல்லது மீனவர்கள் போர்வையில் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட வந்துள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இதுபோன்று இலங்கையிலிருந்து மீனவர்கள் போர்வையில் தங்கம் கடத்தி வந்து 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் படகில் மறைத்து வைத்திருந்த 3.5 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது இலங்கையிலிருந்து பைபர் படகில் ஐந்து நபர்கள் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு வந்தது அனைத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் கடல் பாதுகாப்பு பிரிவு போலீசார் மத்தியிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிடிப்பட்ட இலங்கை படகு மீனவர்களின் விபரம் படகு என்:OFRP-A- 3981 MNR இன்ஜின் பொருத்தப்பட்டது

(1) ஸ்டீபன்ராஜ் 28தலைமன்னார்  மன்னார் Dist இலங்கை
(2) இயேசு ராஜா , 46தலைமன்னார் , மன்னார் Dist இலங்கை
(3) உதயகுமார்  40தலைமன்னார் , மன்னார் Dist இலங்கை
(4) உதயகுமார்  40தலைமன்னார் , மன்னார் Dist இலங்கை                       
(5) K.ரவீந்திரன்   29தலைமன்னார் , மன்னார் Dist இலங்கை                         
(6) K. ரெக்சன்   22தலைமன்னார் , மன்னார் Disஇலங்கை.

32 Days ago

Download Our Free App