Best for small must for all

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒரு வருடத்துக்கு முகக்கவசம் கட்டாயம்: சுகாதாரத்துறை செயலர் பேட்டி

News

மதுரை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஓராண்டிற்கு பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதியை அதிகரிக்க அரசு ரூ.75 கோடி ஒதுக்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் கண்டறிய, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.5சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இறப்பை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்த 62 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். சுனாமி போன்ற இயற்கைச் சீற்றமாக, கொரோனா தொற்று உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மேலும் ஓராண்டிற்கு பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இதுதான் கொரோனாவிற்கான மருந்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

313 Days ago
Advertise Here