आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி!: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!!!

News

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஆட்சியர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் 1480 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 338 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது, மருத்துவமனையில் 1130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் தினந்தோறும் திணறி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பலரும், கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டனர். இதில் தொற்று பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். மேலும், கொரோனா தொற்று பாதித்தவர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த பணிகளை எல்லாம் அதிகாரிகள் சரிவர செய்கின்றனரா? என்பதை ஆய்வு செய்ய கோவை மாவட்ட ஆட்சியரே கொரோனா தடுப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று கண்டறிந்து வந்துள்ளார். இதனால் தற்போது மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சியரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

28 Days ago
Advertise Here