A part of Indiaonline network empowering local businesses

சமையல் செய்யும் ‘ரோபோ’ இயந்திரம்

News

மதுரை: மதுரையில் முதன்முறையாக சமையல் செய்யும் ரோபோ இயந்திரத்தின் செயல்விளக்கம் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டப்பட்டது. சமையல் செய்யும் ‘ரோபோ’ இயந்திரம் மூலம், மதுரையில் உணவு சமைக்கப்பட்டு காட்டப்பட்டது. முற்றிலும் இயந்திர முறையில் இயங்கும் இந்த ஆட்டோமேட்டிக் ரோபோவை வடிவமைத்துள்ள குழுவில் ஒருவரான சரவண சுந்தரமூர்த்தி கூறும்போது, ‘‘இந்த இயந்திரம் மூலம் ரசம் முதல் பிரியாணி வரை 800 வகையான உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். உலகின் சிறந்த சமையல் கலைஞர்கள் குறிப்புகள் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான உணவிற்கு ஏற்ப, உரிய பொருட்களை இயந்திரத்திற்குள் சேர்த்தால் போதும். சமையலுக்கான அளவுகளை மட்டும் இயந்திரங்கள் எடுத்துக்கொள்ளும். ஆயிரத்து 600 பேருக்கு, 800 பேருக்கு, 10 முதல் 100 பேருக்கு என வெவ்வேறு அளவுகளில் சமைக்கும் வகையில் இது இருக்கிறது’’ என்றார்.

1347 Days ago