திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச லேப்டாப் கேட்டு மாணவிகள் முற்றுகை: எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்

News

திருப்பூர்: இலவச லேப்டாப் கேட்டு மாணவிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பிளஸ்-2 முடித்த மாணவிகள் 1500 பேருக்கு இலவச லேப்டாப் இன்னும் தரப்படவில்லை. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், 2017-2018, 2018-2019 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு டிச.16க்குள் லேப்டாப் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி முடிந்து கல்லூரி சென்றுள்ள மாணவ, மாணவிகளுக்கும் கல்லூரிகள், நிறுவனங்களிலிருந்து சான்றிதழ் வாங்கிவரும் பட்சத்தில் லேப்டாப் அளிக்க அறிவுறுத்தியுள்ளது. கூடுதலாக தேவைப்படின் அதன் விவரத்தை 17ம் தேதிக்குள் (இன்றைக்குள்) தெரிவிக்க வேண்டும் என்றும், பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கும், உயர் கல்வி பயிலாத மாணவர்களுக்கும் ேலப்டாப் கிைடயாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து லேப்டாப் பெறாத மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார்,  5 பேர் மட்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியைச் சந்திக்கலாம் என்று கூறினர். மாணவிகள் கலெக்டரை நேரில் சந்திக்க வேண்டும் என வற்புறுத்தினர். முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள் அந்த மாணவிகளிடம் விளக்கம் அளித்தனர், எனினும் அதை மாணவிகள் ஏற்கவில்லை. இதையடுத்து ஐந்து மாணவிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. குணசேகரன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் மாணவிகள், “வேண்டும், வேண்டும், மடிக்கணினி வேண்டும்” என முழக்கம் எழுப்பி அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர். எம்எல்ஏவும், கலெக்டரும் மாணவிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

62 Days ago