A part of Indiaonline network empowering local businesses

நானோ யூரியாவை பயன்படுத்தி மகசூல் அதிகரிக்க செய்யுங்கள்: விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

News

திருவள்ளூர்: வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை;தற்போதைய நிலையில் விவசாயிகள் யூரியாவை பயிர் சாகுபடிக்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். யூரியா ஒரு மூட்டைக்கு சமமான ஒரு பாட்டில் 500 மி.லி நானோ யூரியாவை இலை வழியாக செலுத்தி பயன்பெறலாம். இதை இந்திய உரக்கட்டுப்பாடு ஆணையமும் அங்கீகரித்துள்ளது. தற்போது பயிர்களுக்கு யூரியா குருணை மூலமாகவே வழங்கி வருகிறோம். இதில் யூரியா குறைந்த பயன்பாட்டின் காரணமாக 30 முதல் 50 சதவீதம் வரையில் பயிரில் பயன்படுகிறது. இதில் மீதமுள்ள நைட்ரஜன், அமோனியா, நைட்ராசைடு, நைட்ரேட் வடிவத்தில் கசிந்து மண், காற்று மற்றும் நீரை மாசுப்படுத்துகிறது. ஆனால் நானோ யூரியாவை பயன்படுத்துவதால் தாவரத்தின் தழைச்சத்து, பசுமைத்தன்மை மற்றும் ஒட்டு மொத்த பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது. பயிருக்கு தேவையான தழைச்சத்து தேவையை திறம்பட பூர்த்தி செய்கிறது. இதன் மூலம் பயிர்களில் ஊட்டத்தினை அதிகரிப்பதுடன் மகசூல் அதிகரிப்பதுடன் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். இதனால் குருணை யூரியாவின் தேவையை 50 சதவீதம் அல்லது அதற்கு மேலும் குறைக்கலாம்.நெல், மக்காச்சோளம், கரும்பு, பயறு வகை மற்றும் எண்ணெய் பயிர்கள், காய்கறிகள், மலர் ஆகியவைகளுக்கு இலைவழியாக தெளிக்க சிறந்த தழைச்சத்து உரமாகும். இதை ஒரு இடத்தில் இருந்து மிகவும் எளிதாக கொண்டு செல்லலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 24 மி.லி நானோ யூரியாவை கலந்து பயிர் முழுவதும் தெளிக்கலாம். இதில் 30, 35 நாட்களிலும் 2ம் தடவை பூப்பதற்கு முன்பாகவும் சிறந்த மகசூல் கிடைக்க பயன்படுத்தலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

577 Days ago