புகையிலை விற்பனை ஜோர்

News

தேனி: தமிழக அரசு புகையிலை பொருள்களான பான்பராக், புகையிலை, பான்மசாலா போன்றவை தடைசெய்துள்ளது. இத்தகைய புகையிலை பொருள்கள் விற்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும், தேனி மாவட்டத்தில் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறிய பெட்டிக்கடைகள், டீக்கடையுடன் கூடிய பெட்டிக்கடைகள், பலசரக்குக் கடைகளில் பான்மசாலா பொருள்கள் விற்பனை பகிரங்கமாக நடந்து வருகிறது. இத்தகைய தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்ய தேனியில் மொத்த வியாபாரிகள் உள்ளனர். புற்றுநோய் உருவாக்கும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

33 Days ago