आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

பெரம்பலூரில் ஜீப்பில் இருந்தபடியே தாதாவைபோல் டிராபிக் இன்ஸ்பெக்டர் மாமூல் வசூல்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

News

பெரம்பலூர்:பெரம்பலூரில் ஜீப்பில் இருந்தபடியே தாதாவைப் போல் மாமூல் வசூலிக்கும் டிராபிக் இன்ஸ்பெக்டரின் வீடியோ வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.“சார் சாப்பிடவே 200ரூவாதான் இருக்கு”“சார் பணத்தை வாங்கி வையுங்கசார், உங்களப் பார்த்தா தினமும் நிறுத்தாமலா போறோம், இருக்குறத வாங்கிக்கோங்க சார்”“சார் எங்க படிக்காசுலதான் உங்களுக்கு பணம் தரனுமாம், ஓனர் வால் வாலுன்னு சத்தம் போடுறாரு”.“டிராபிக் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சும் லாரி டிரைவர் கள்.”பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, சேலம்- தஞ்சை தேசிய நெடுஞ் சாலை, பெரம்பலூர்- துறை யூர் செல்லும் மாநில நெடு ஞ்சாலை என பல்வேறு முக்கிய சாலைகள் பெரம்ப லூரில்சங்கமிப்பதால் தின மும் கணக்கற்ற கனரக வாகனங்கள் இந்த நகரை தொட்டுவிட்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இதில் ஓவர்லோடு, ஓவர் ஸ்பீடு, டிரங்க் அன் டிரைவ் என பல்வேறு வழிகளில் சிக்கும் ட்ரைவர்களால் பெரம்பலூருக்கு டிராபிக் இன்ஸ்பெக்டராக வருவோருக்கு மாமுல் பணம் மழைபோல் கொட்டித்தீர்ப்பது வழக்கம். இதற்காக தேடிப்போய் அலையத் தேவையில்லை. வண்டியை நிறுத்தி விட்டு டிரைவர்கள் வந்து கொடுத்துவிட்டு செல்வதால், தினமும் நோகாமல் நொங்கு எடுத்து வருகின்றனர்.இதில் நேற்று பெரம்பலூர் டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் சௌந்தர்ராஜன் என் பவரிடம், பல லாரி டிரைவர்கள் வலியச்சென்று மாமூல் பணத்தை கொடுப் பதுவும், அவர் கள்ளப் பணமாக இருந்தாலும், கருப்பு பணமாக இருந்தாலும், கறாராக வசூலிப்பது போல் பிகு பண்ணுவதும் அடங் கிய வீடியோ பதிவு ஒன்று தமிழகமெங்கும் வைரலாக பரவி பெரம்பலூர் காவல்து றையின் மானத்தை வஞ்ச னை இன்றி வானத்தில் பறக்க விட்டது. அதில் நடந்த உரையாடல் பின்வருமாறு:இன்ஸ்: என்ன லோடு இதுடிரைவர்: வேஸ்ட் குட்ஸ் சார்இன்ஸ்: எவ்வளவு எடை இருக்கும்.டிரைவர்: 12 டன் சார், 13 டன்னு அளவுக்கு இருக்கும்இன்ஸ்: ஒரு டன்னுதான் கூட வருமா ? வே பிரிட்ஜ் பில் இருக்கா ?டிரைவர்: சார் இந்தாங்க சார் பணத்தை வச்சிக்கோங்க சார்.இன்ஸ்: லைசன்ஸக் கொ டுப்பா கேஸ் போட்டுக்க லாம் எனக்கூறியதும் இன் ஸ்பெக்டர் எதிர்பார்த்த பணத்தை அந்த டிரைவர் கொடுத்துவிட்டுச் செல்கி றார். அதனை இன்ஸ்பெ க்டர் வாங்கிஎண்ணி சரி பார்த்து வைத்துத்கொள் கிறார்.மற்றொரு டிரைவர்: சார் நூறு ரூபா கூடுதலாகூட வச்சிக்கோங்க சார், 10 நிமி ஷம், டீ குடிக்கதான் நிப்பா ட்டுனேன் சார், 1 நிமிஷம் நின்னா கூட ஓனர் சத்தம் போடுவார் சார்.இன்ஸ்: ஓனர் கிட்ட பேசி ட்டு வந்தேன்ன்னு தானே சொன்ன அப்புறம் என்ன.டிரைவர்: அவரு (ஓனர்) ஆயிரம் ரூபாய் கொடுத் தாலும் உன் கை காசுல இருந்துதான் கொடுக்க னும்னு சொல்றாரு சார். எனக்கு படிக்காசே ஆயிரம் ரூபாய்தான் சார்.இன்ஸ்: அப்புறம் எதுக்கு ஓனர் கிட்ட பேசுன.டிரைவர்: அவரு கேஸ் போடாமல் நீயே பார்த்து குடுத் துட்டு வான்னு சொன்னாரு சார்.இன்ஸ்: அதுக்குதான் பில்லக் கட்டச் சொன்னேன் கவர்ன்மெண்டுக்கு தானே போகுது. கட்டிட்டு போ பில் ல தரேன், வாங்கிட்டுபோடிரைவர்: சார் ஓனர் வால், வால்னு சத்தம் போடுவார்இன்ஸ்: சரி கவர்மெண்டு க்கே கட்டிட்டு போ எனக்கூ ற அந்த டிரைவரும் கேட்ட பணத்தைக் கொடுத்து விட் டு செல்கிறார்.இன்ஸ்: என்ன தலமற்றொரு டிரைவர்: சார் பணத்தை கையில வையுங்க சார், அரியலூர் தானே சார், ரெகுலரா போயிட்டு தானே இருக்கோம். உங்க ளப் பார்க்காம, நிறுத்தாம, கொடுக்காம, எப்போதா வது போயிருக்கமா, ரெகு லரா போயிட்டு இருக்க வண்டிக்கே இப்படி பண்றீங்களே சார்.இன்ஸ்: வண்டிய நிறுத்தி ட்டேன்னுவேற சொல்றீங்க டிரைவர் : சார் சாப்பிடவே இவ்வளவுதான் சார் இருக்கு.200 ரூவாதான் இருக்கு வாங்கிக்கோங்க சார் என டிரைவர் கெஞ்சுகிற அந்த வைரலாகி வரும் வீடியோ வில் இன்ஸ்பெக்டருக்கும் டிரைவர்களுக்குமான உ ரையாடல் இடம் பெற்றுள் ளது.இதனால் பாட்ஷா படத்தில் மும்பை தாதா ரஜினி, அமர் ந்த இடத்திற்கு, ஏரியா அடி யாட்கள்அனைவரும் கப் பம் கட்ட வருவதுபோல், காரில் அமர்ந்திருக்கும் இன்ஸ்பெக்டருக்கு டிரைவ ர்கள் வரிசையாக வந்து கெஞ்சிகூத்தாடி மாமூலை கொடுப்பதும், அதனை கு றைக்காமல் கேட்டபடி, கொ டுக்க வேண்டுமென இன் ஸ்பெக்டர் கறாராக பணத் தை வசூலிப்பதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

46 Days ago

Download Our Free App