ஸ்ரீபெரும்புதூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி, மார்ச் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடத்தபட்டது. இப்போட்டியில், செரப்பணஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 13 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில், மறைமலைநகரை சேர்ந்த அணி முதலிடமும், தாம்பரம் அணி 2ம் இடமும், நாவலூர் குடிசை மாற்று வாரிய அணி 3ம் இடமும் பிடித்தன. நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு விழாவில், செரப்பணஞ்சேரி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு முதல் 3 இடங்கள் பிடித்த அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.