மூணாறில் பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் மாணவர்கள்

News

மூணாறு: மூணாறில் எஸ்டேட் பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் சாலைகள் பல வருடங்களாக குண்டும், குழியுமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள், தோட்டத்தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர். மூணாறில் தோட்டத்தொழிலாளர்கள் அதிகளவு குடியிருக்கும் எஸ்டேட் சாலைகள் மற்றும் பள்ளிகள் செல்லும் சாலைகள் மோசமான நிலையை அடைந்துள்ளன. குண்டும், குழியுமான சாலைகளால் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்துள்ளார். மேலும் குருமலை சவுத் டிவிஷன், நார்த் டிவிஷன் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு மூணாறு வந்தடைய முக்கிய சாலையாக நடையார் எஸ்டேட் சாலை கருதப்படுகிறது.ஆனால், இந்த பல வருடங்களாக குண்டும் குழியுமாக மோசமான நிலையை எட்டியுள்ளது மேலும் வாகனங்கள் ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மூணாறில் தொழிலாளர்கள் குழந்தைகள் பயிலும் சிறுமலர் பெண்கள் பள்ளி மற்றும் தேயிலை அருங்காட்சியகம், வெளிநாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்துவரும் ஐடிடி நிறுவனம், தீயணைப்புத்துறை அலுவலகம்  போன்றவை அமைந்துள்ள முக்கிய பகுதியான நல்லத்தண்ணி செல்லும் சாலை ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வரும் இந்த சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து உள்ளதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அத்துடன் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் மனஉளைச்சல் அடைந்துள்ளார். மாணவ மாணவ, மாணவிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் பரிதவித்து வருகின்றனர். குறிப்பிட்ட இந்த சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் செய்யப்படும் சாலைகளை சீரமைக்க ஒப்பந்தக்காரர்கள் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சாலைகளின் இந்த நிலையை குறித்து சிறுமலர் பள்ளி முதல்வர் கூறுகையில், ``ஒவ்வொரு நாளும் மாணவிகள் அச்சத்துடன் சாலைகளை கடந்து  பள்ளிக்கு வருகின்றனர்’’ என்று கூறினார். தொழிலாளர்கள் கூறுகையில்,`` நடையார் சாலை பழுதடைந்த காரணத்தால் தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனங்கள்  நிலைதடுமாறி வருவதாகவும் இதனால் தொழிலாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ள” என்று கூறினர்.இந்நிலையில் சாலைகளின் இந்த நிலையை குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் ஓன்று சேர்ந்து தேவிகுளம் துணை கலெக்டருக்கு சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரிக்கை முன்வைத்துள்ளனர். சுற்றுலா வளர்ச்சிக்காக மூணாறில் பல திட்டங்கள், பல நிகழ்ச்சிகள் பல லட்ச ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தும்  அரசு தொழிலாளர்களின் மீது அக்கறை கட்டுவதில் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

34 Days ago

Download Our Free App