போதையில் போலீஸ் தாக்குதல் எஸ்பி அலுவலகத்தில் புகார்

News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே எம்.புதூரை சேர்ந்த சுந்தரபாண்டியன் சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 13ம் தேதி இரவு 10.15 மணிக்கு எனது மகன், மகள் மற்றும் உறவினர்கள் சென்னையில் இருந்து வருவதையொட்டி அவர்களை அழைத்து செல்ல திருக்கோஷ்டியூர் கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது திருக்கோஷ்டியூர் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் பாண்டியராஜன் என்ற போலீஸ் என்னிடம் குடிபோதையில் தவறான வார்த்தைகளை பேசினார். ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ ஒருவரும் வந்து, பாண்டியராஜன் குடிபோதையில் இருப்பதையறிந்து என்னை கிளம்ப சொன்னார். நான் கிளம்ப முயற்சித்த போது பாண்டியராஜன் என்னை கன்னத்தில் அடித்து கீழே தள்ளினார். நான் போன் செய்ய முயற்சித்த போது செல்போனை கீழே போட்டு உடைத்துவிட்டார். தொடர்ந்து இன்று தப்பித்துவிட்டாய் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டினார். எனது மகன், மகள் உறவினர்கள் மத்தியில் மிகுந்த அவமானம் ஏற்பட்டு மன உளைச்சல் அடைந்தேன். இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீஸ் ஸ்டேசனில் அன்று இரவே புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிபோதையில் என்னை தாக்கி அவமானப்படுத்திய பாண்டியராஜன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

43 Days ago

Download Our Free App