A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

உலக வன உயிரினங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

News

உலக வன உயிரினங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திரமோடி விடுத்துள்ள செய்தியில், வன உயிரினங்களின் பாதுகாப்புக்காக பணியாற்றி வரும் அனைவருக்கும் தமது வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் சிங்கம், புலி, சிறுத்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பிரதமர், வனங்களையும், வன உயிரினங்களை காப்பதற்கும் மக்கள் அனைத்து வகைகளிலும் உதவிட வேண்டுமென்று கேடடுக் கொண்டுள்ளார்.

மத்திய வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேக்கர் விடுத்துள்ள செய்தியில், வனவிலங்குகளை பாதுகாப்பதில் இந்தியா சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் உள்ள ஆசிய சிங்கங்கள் மற்றும் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அழிந்து வரும் சிறுத்தை இனங்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டம் வகுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (AIR)

1143 Days ago