A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் 113 போலியோ சொட்டு மருத்துவ முகாம்

News

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை ஆணையர் நாராயணன் தலைமை தாங்கினார் .முகாமினை சந்துரு, சுரேஷ், கமலக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.போலியோ என்னும் இளம் பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட கடந்த 22 வருடங்களாக போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.நேற்று ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 721 மையங்களில் சுமார் 1,07,934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஆக மொத்தம் 2,818 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திருவிழா ஒலித்த முக்கிய இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஆர்த்தி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு முகாமை தொடங்கி வைத்தார். எம்.பி. செலவம் ,எம்எல்ஏ எழிலரசன்ஆகியோர் கலந்து கொண்டனர். வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரி, மாம்பாக்கம், காந்திநகர், கடப்பேரி உள்ளிட்ட 24 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், மதுராந்தகம் நகராட்சி சுகாதார துறை சார்பில், 13 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நேற்று அமைக்கப்பட்டன. இதில், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 52 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்தை போடும் பணியில் ஈடுபட்டனர்.

778 Days ago