A part of Indiaonline network empowering local businesses

குளித்தலை அருகே 28 ஆண்டுகளுக்குப் பின் கோயில் திருவிழா: தேவராட்டம், ஒயிலாட்டம் என களைகட்டியது..!!

News

கரூர்: கரூர் மாவட்டம் மாலை மேட்டில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளித்தலை அருகே மாலை மேட்டில் உள்ள மாலையம்மன் கோயிலில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு அத்திமரத்தால் ஆன சிலை திருடுபோனதால் அதன் பின் திருவிழா நடக்கவில்லை. அண்மையில் அந்த சிலை மீட்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் மாடு,மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளும்  அரங்கேறின. இரு தரப்பு மக்களிடையே நிலவி வந்த பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு மாலை மேட்டில் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.

462 Days ago