A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

தமிழகத்திலும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

news

தமிழகத்திலும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் மகளிரை கௌரவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் மகளிருக்கு வாழ்த்துச் செய்தி விடுத்துள்ளனர்.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய பங்களிப்பை அளிப்பதற்கு நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டுமென்று ஆளுநர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தொpவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக சமூகத்தை தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தாம் தலைவணங்குவதாக திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது என்று சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் ஜெயந்தி கூறியுள்ளார். (AIR)

1134 Days ago